போலாந்து நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிக்கு தேர்வாகி உள்ளதேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதய கீர்த்திகா மற்றும் மாணவியின் பெற்றோரை சந்தித்த தேனி பாராளுமன்ற உறுப்பினாரும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத் குமார் MBA MP அவர்கள் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார். மேலும் மாணவியின் ஆராய்ச்சி படிப்புக்காக ரூபாய் மூன்று லட்சத்திக்கான காசோலை வழங்கினார். உடன் தேனி நகர் கழக செயலாளர் T. கிருஸ்ணகுமார், மாவட்ட துனை செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய செயலாளர் RD .கணேசன், மாவட்ட அணிச் செயலாளர்கள் முருகேசன், பாலசந்தார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனார்
Friday, June 7, 2019
Thursday, June 6, 2019
கிளை நூலகம் அமைத்த கிராம மக்கள்.... விருதுநகர்
ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை சார்பில் விருதுநகர் மாவட் Lம் காடனெரி துலுக்கப் பட்டி கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களும் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியல் RKஎலைட் அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில் அப்பையன், தசர பாண்டியன் , காவலர் சுரேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் , இளைஞர்கள் ஏராள மனோர் கலந்து கொண்டனார்
Wednesday, June 5, 2019
Tuesday, June 4, 2019
மேலப்பாளையம் கரீம்நகரில் பெருநாள் திடல்தொழுகை நடைபெற்றது
மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதியான கரீம் நகரில் பெருநாள் காலை 7 :15 மணி அளவில் அல்மதீனா பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது
பெருநாள் குத்பா உரையை - மவ்லவி K.S சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் நிகழ்தினார்கள்
மெளலவி மீரான் முஹைதீன் அன்வாரி பெருநாள் தொழுகையை நடத்தினார்கள்
இதில் மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாக கமிட்டி பொருளார் ஐவஹர் அலி,எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் கனி, மற்றும் மாவட்ட தொகுதி, பகுதி, வார்டு,நிர்வாகிகள் , லெப்பை, மின்னதுல்லாஹ், புஹாரி, ஜமாத்தார்கள், பெண்கள்,குழந்தைகள், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக் ஊடகவியாளர் சந்திப்பின் போது ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது;
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாள் தினம் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.
பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பசித்தோருக்கு உணவளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோதரத்துவத்தை நாம் மேலோங்கச் செய்திட வேண்டும்.
நாட்டில் மத, இனப் பிரிவுகளுக்கிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
தற்போது மத்தியில் மீண்டும் இந்துத்துவ பாசிச சக்திகள் ஆட்சிக்கட்டிலில் வலிமையாக அமர்ந்துள்ளன. இதனால் பாசிச சக்திகள் இன்னும் வேகமாக அதன் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும். சர்வாதிகார போக்கில் நாட்டு மக்களை வழிநடத்தும். அதன் காரணமாக சிறுபான்மை மக்கள் உள்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனினும் எப்படிப்பட்ட சர்வாதிகாரமாக இருந்தாலும் அது வலுவான மக்கள் எழுச்சியின் முன் வீழும் என்பதால், பாசிச சக்திகளின் சர்வாதிகாரத்தை துணிந்து எதிர்கொள்ள வேண்டும். பாசிச சக்திகளை வீழ்த்த தேர்தல் மட்டும் வழிமுறை அல்ல. பல்வேறு ஜனநாயக வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளை தேடி நாம் ஒருங்கிணைய வேண்டும் என கூறினார்
Saturday, June 1, 2019
காவல்நிலையம் முன் டிக்டாக் செயலில் வீடியோ எடுத்த வாலிபர் கைது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையம் முன் டிக்டாக் செயலில் வீடியோ எடுத்த வாலிபர் கைது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(21). திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரியும் இவர் விடுமுறைக்காக சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் தங்கேஸ்வரனுக்கு ஓட்டுநர் உரிமம் சரிபார்ப்பிற்காக கண்டமனூர் காவல்நிலையம் சென்றுள்ளார். டிக்டாக் மோகத்தால் காவல்நிலையம் முன்பாகவே வீடியோ எடுத்த பாண்டி, அதனை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியதையடுத்து இன்று சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர் பரமேஸ்வரன் நண்பரான தங்கேஸ்வரன் என்பவரையும் தேடி வருகின்றனர். டிக்டாக் மோகத்தால் காவல் நிலையம் முன்பாக வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் மோகத்தால் பெண்கள், வாலிபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)