Friday, July 12, 2019

நேரு யுவகேந்திரா கீழ் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றத்தின் சார்பாக கிராமங்கள்தோறும் தூய்மை பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்







மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது.   ..                         ... மத்திய அரசின் ஊரக வளர்ச்சி குடிநீர் மற்றும் சுகாதாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடைகால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணியினை நேரு யுவகேந்திரா மன்றத்தின் கீழ் பதிவு பெற்ற இளைஞர் மன்றங்கள் நடத்தி சிறப்பாக செயல்படும் மன்றங்களுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும்  தூய்மை பாரத  இயக்கத்தில் சுகாதார இருப்பதன் அவசயத்தினை உணர்த்த விழிப்புணர்வு மூலம் உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், தூய்மையை பற்றிய தெரு நாடகங்கள் நடத்துதல், தூய்மை மேலா நடத்துதல்,  கிராமம் மற்றும் பள்ளி அளவில் , ஊர்வலம் நடத்துதல், குப்பகளை அகற்றுவதற்கு உதவிகள் செய்தால், மக்கும் - மக்காத - திடக்கழிவு மேலாண்மை பற்றி கூறுதல், கழிவு குப்பை குழி விரிவாக்கம் செய்தால், வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு பொது இடம் ஏற்பாடு செய்தல், பயோகேஸ்தொடங்க பஞ்சாயத்துகளுக்கு உதவுதல், தெரு சுத்தம் தொடர் சுத்தம் செய்தல், கிராமங்களில் வீடுகளுக்கு கழிப்பறை கட்ட விழிப்புணர்வு செய்தல் போன்ற தூய்மை சம்பந்தமாக நிகழ்ச்சிகளை நடத்தும்  தனி நபர் மற்றும் இளை ஞர் மன்றங்களுக்கு தேசிய _ மாநில _ மாவட்ட அளவில் ஆகிய தனித் தனி பிரிவில் முதல்மூன்று இடங்களுக்கு பரிசுகளை அறிவுத்தி உள்ளது. அதன்படி இன்று நேரு யுவகேந்திரா கீழ் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றத்தின் சார்பாக கிராமங்கள்தோறும் தூய்மை பாரத விழிப்புணர்வு, நெகிழியின் தீமைகள் பற்றி மரிக்குண்டு மற்றும் ஒக்கரைபட்டி, பஞ்சாயத்து கிராமங்களில் தேவரா ட்டத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தி தூய்மை பாரதம்பற்றியும், நெகிழியின் தீமை பற்றியும் விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். மேலும் இம்மன்றத்தின் மூலம் தெருக்களை சுத்தம் செய்தால், பூமி செழித்து தூய்மையான காற்று கிடைக்க கிராமங்கள் தோறும் மரங்கள் நடுதல் மற்றும் மத்திய இளைஞர் மேம்பாட்டு துறை அறிவுத்து உள்ள செயல்பாடுகளை செய்து வருகின்றனார். விழிப்புணர்வு ஏற்பாடுகளை இளையோர் மன்ற தலைவர் பரமசிவம், பிச்சை மணி , உதயராஜா, பாபு , நவீன், நவநீதான், செளந்தர பாண்டி மற்றும் வீராபான்டிய கட்டபொம்மன் இளைஞர் அணியினார் செய்திருந்தனார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமேனார் கலந்து கொண்டனார்...

“தூய்மை இந்தியா இயக்கம்” சிறப்பு விழிப்புணர்வு முகாம்







இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி சார்பில் “தூய்மை இந்தியா இயக்கம்” சிறப்பு விழிப்புணர்வு முகாம் பாளையங்கோட்டை பர்கிட்மாநகரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றி என்பது அரசு முயற்ச்சி மட்டும் அடங்கியது அல்ல ஒவ்வொரு தனிமனிதனும் இத்திட்டத்தில் கைகொர்த்தால் மட்டுமே வெற்றி நிற்றயம் என்றார். மேலும் பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் அதனுடைய தீமைகள் குறித்தும் நாம் முழுமையாக தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்றார். மேலும் மக்கள் சுயஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பர்கிட்மாநகர் அரசு ஆரம்பசுகாதாரநிலைய மருத்துவர் ராமலதா தூய்மை இந்தியா திட்டத்திற்கு மக்களின் பங்களிப்பு குறித்தும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்தும் அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் உரையாற்றினார். தமிழ்நாடு கிராம வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் திரு.மகாலிங்கம் பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம், விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து உரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில்  மாவட்ட தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், உதவி செயற் பொறியாளர் ஆழ்வார், வட்டார தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் சுதா, ஆராய்ச்சி செயல் திட்ட சுகாதார ஆய்வாளர் முத்துராமன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஷாஹ{ல் ஹமீது, ஜெஸ்லின் கனக இன்பா, ஜெமி மெர்லின் ராணி மற்றும் ரம்யா கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள்  கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள்  பங்குபெற்ற பேரணியை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ் கொடி அசைத்து துவங்கி வைத்தார். மேலும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவிகள் பர்கிட்மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் கோடங்கி கலைக்குழுவினரின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் துய்மை மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்றது.



அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிற்சி பட்டறை





நெல்லை அரசு அருங்காட்சியகமும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியும் இணைந்து முதலாமாண்டு சித்த மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓலைச்சுவடி பாதுகாப்பு 2 நாள் பயிற்சி பட்டறை நடத்தினர் .
முதல் நாள் பயிற்சி 11/ 7 /2019  அன்று அரசு சித்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேராசிரியர் மருத்துவர் பா. மலர்விழி, துறைத் தலைவர் அவர்கள் வரவேற்புரை நல்கினார். துணை முதல்வர் பேராசிரியர். மருத்துவர். திருத்தணி அவர்கள் தலைமை ஏற்று நிகழ்வினை நடத்தினார். முதலாம் அமர்வாக சுவடியும் கணினியும் என்கிற தலைப்பில் இரா. ஸ்பர்ஜன் ரத்தீஷ் உதவிப் பேராசிரியர் , சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சிறப்புரை ஆற்றினார். மதியம் இரண்டாம் அமர்வாக ஓலைச்சுவடி பாதுகாப்பு என்கிற தலைப்பில் காப்பாட்சியர்
 சிவ. சத்திய வள்ளி ஓலைச்சுவடி பாதுகாப்பில் பின்பற்றப்படும் முறைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் நாள் பயிற்சி இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அதில் சுவடியியல் பற்றிய  வே. கட்டளை கைலாசம், மேனாள் தமிழ்த்துறை தலைவர் மதிதா இந்து கல்லூரி அவர்களால் சிறப்புரை  வழங்கப்பட்டது.  அந்த அமர்வில் ஓலைச்சுவடிகளின் தோற்றங்கள் பற்றியும் வரலாறு பற்றியும் விளக்கமாக மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது இரண்டாம் அமர்வு சுவடிகள் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்கத்தினை காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார் அருங்காட்சியகத்தில் உள்ள சுவடிகளைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில்" மேலும்"சிவசு அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் அரசு சித்த மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளர் மருத்துவர் வேதகிரி சுப்பையா நன்றியுரை தெரிவித்தார். இப் பயிற்சி பட்டறையை நடத்திய நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ சத்திய வள்ளி  இப்பயிற்சி பற்றி தெரிவிக்கையில் இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்திற்கு ஓலைச்சுவடிகள் அதிகமாக உள்ளன. திருநெல்வேலியில் மிகவும் அதிக அளவில் ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவத்தின் சித்த மருத்துவத்தில் பல அரிய கருத்துக்களை நமது முன்னோர் ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர் அந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. தஞ்சை தமிழ் பல்கலைகழகம் பல்வேறு நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அவற்றை பாதுகாத்து வருகின்றன . அதையும் தாண்டி தனிநபர்களின்  வசம் பல ஓலைச் சுவடிகள் மருத்துவ குறிப்புகள் பயனற்ற நிலையில் உள்ளன .அவற்றை மின்னணு முறையில் பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் செய்துவருகின்றன. தென் தமிழகப் பகுதியில் கிடைத்த ஓலைச்சுவடிகள் அதிக அளவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள ஓலைச்சுவடிகளை , அந்த சுவடியில் உள்ள தகவல்களை அறியும் பொருட்டு அச்சுவடுகளை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தால் சுவடிகளில் உள்ள அரிய தகவல்களை மின்னணு முறையில் மாற்றி பாதுகாத்து அந்த சுவடிகளை தங்கள் வசமே திரும்ப ஒப்படைக்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

Thursday, July 11, 2019

மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக மேலப்பாளையம் பகுதியில் அதிகரித்து வரும் மர்மகய்சல் மரணம் குறித்து தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது






மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக  ஒருங்கிணைப்பாளர் கே. எஸ். சாகுல் ஹமீது உஸ்மானி  தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை  நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் மேலப்பாளையம் பகுதியில் அதிகரித்து வரும் மர்மகாய்சல் மரணம் குறித்து
அவர் களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மன்டலத்தால் மேலப்பாளையம் பகுதி சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரால்
சில மாதங்களில் நூற்றுக்கணக்கான இறப்பும், மர்ம காய்ச்சல்,மஞ்சல்காமாலை நோய் ஏற்படுகிறது.
இதற்கான காரணம் குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை கழந்து வரும் குடிநீர்,
ஆதாரமாக மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட சில தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீரை  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வக  கூடத்தில் கொடுத்து ஆய்வு செய்ததில் குடிநீர் தோற்றுநோய் கிருமிகள், இரும்பு துகள்கள் அதிகம் உள்ளதாக அறிக்கை வந்தது
ஆகவே பொதுமக்கள் சுகாதார மான குடிநீர் பெற்று நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ அதிகம் இறப்புகள் தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள்
மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் ஜமாத்கள் தலைவர்களை அழைத்து  உரிய ஆலோசனை பெற்று போர்காள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்

2)மேலப்பாளையம் கன்னிமார்குளத்தில் கலக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவு நீர் ஓடைகளை மாற்றுப்பாதையில் செலுத்தி கன்னிமார்குளத்தினை காக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உறிய நடவடிக்கை எடுக்க ஆனையிட வேண்டுகிறோம்
3)பாளையங்கால்வாயில் கலக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர் ஓடைகளை மாற்றுப்பாதையில் திருப்பி பாளையங்கால்வாயினை காக்கவும்
பசுமை பாளையங்கோட்டை யாக மாற்றிட வேண்டுகிறோம்


இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.சாகுல் ஹமீது உஸ்மானி, தொகுதி இணை செயலாளர் புகாரிசேட் ,தி.மு.க மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கய்யூம் ,33வது தி.மு.க  வட்ட செயலாளர் சேக் மைதீன், சி.பி.ஐ நிர்வாகிகள் தோழர்கள் ஷாஜஹான் , பீர், மன்சூர்,இலைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆசாத் பாஷா,த.மு.மு.க நிர்வாகி கனி, இந்திய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி தொழில் அதிபர் முகமது ஹனீபா
நுகர்வோர் கண்காணிப்பகம் சங்கம் பொறியாளர் அப்துல் முத்தலிப் , பொறியாளர் காஜா  உடன் இருந்தனர்

தேனி மாவட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் பெரியகுளம் கோட்டாட்சியர் திருமதி பிரதீபா கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பின்பு கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரியின் தாளாளர் ஜோபி அலெக்ஸ். திருமதி பூங்கோதை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி . தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சாந்தி ராணி. பெரியகுளம் காச நோய் பிரிவு துணை இயக்குனர் முருகன் தேனி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் மருத்துவம் ஊரக நலப் பணி இணை இயக்குனர் எம் சரஸ்வதி. தேனி மாவட்ட முதன்மை கல்வி பொறுப்பு அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் இவ்விழாவில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களை வரவழைத்து அவர்களுக்கு  சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்

Monday, July 8, 2019

பர்கிட்மாநகரில் எஸ்.டி.பி.ஐ கட்சி மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை..





எஸ்.டி.பி.ஐ  கட்சி யின் மகளிர் அணியான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்  அமைப்பின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் பாளை பர்கிட்மாநகரில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து   கொண்டு   கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.
இதில் ஏராளமான பெண்கள்   ஆர்வமுடன் இணைந்தனர். விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்யின் நெல்லை கிழக்கு
மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா கலந்து கொண்டு பெண்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
பர்கிட் அலாவுதீன், பர்கிட்மாநகரம் கிளை தலைவர் சுபைர் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.முடிவில் விம் மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா நன்றியுரை நிகழ்த்தினார்.


கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது


கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இன்று காலை அக்கல்லூரியின் தமிழ்த் துறை யும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.மாரியம்மாள் வரவேற்புரை வழங்கினார்.அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அரிய பொருள் பாதுகாப்பு எனும் தலைப்பில் சிறப்பு ஆற்றினார்.அவர்பேசுகையில்"ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான நம் தமிழ்ப் பண்பாடுகளைக் காத்திடவேண்டும்.தஞ்சை பெரிய கோவில், கிருஷ்ணா புரம் கோவில் கலைச் சிற்பங்கள் எல்லாம் நம் மூதாதையர்களின் அரிய கலைகள் ... அவைகளை பாதுகாத்திட வேண்டியது இளந்தலைமுறையினரின் கடமை"எனப் பேசினார்.

தொடர்ந்து கடந்த ஜுன் மாதத்தில் நெல்லையில் நடந்த பாரதிப் படைப்புகளின் பன்முகப் பார்வை என்ற பன்னாட்டு கருத்தரங்கிற்கு கட்டுரைகள் எழுதிய கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் உட்பட பேராசிரியர்கள் மாணவ மாணவியருக்கு ஆய்வுக்கோவை மற்றும் சான்றிதழ்களை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் வழங்கினார்.
பரணி இலக்கிய முற்றம் கி.சந்திரபாபு பாரதி பாடல் பாடினார்.கவிஞர் சுப்பையா விழிப்புணர்வு பாடல் பாடினார்.நிறைவாக கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வெ.செல்லத்தாய் நன்றி கூறினார்.மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.