Monday, July 8, 2019

பர்கிட்மாநகரில் எஸ்.டி.பி.ஐ கட்சி மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை..





எஸ்.டி.பி.ஐ  கட்சி யின் மகளிர் அணியான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்  அமைப்பின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் பாளை பர்கிட்மாநகரில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து   கொண்டு   கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.
இதில் ஏராளமான பெண்கள்   ஆர்வமுடன் இணைந்தனர். விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட்யின் நெல்லை கிழக்கு
மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா கலந்து கொண்டு பெண்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ  கட்சியின்
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
பர்கிட் அலாவுதீன், பர்கிட்மாநகரம் கிளை தலைவர் சுபைர் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.முடிவில் விம் மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா நன்றியுரை நிகழ்த்தினார்.


கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது


கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இன்று காலை அக்கல்லூரியின் தமிழ்த் துறை யும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.மாரியம்மாள் வரவேற்புரை வழங்கினார்.அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அரிய பொருள் பாதுகாப்பு எனும் தலைப்பில் சிறப்பு ஆற்றினார்.அவர்பேசுகையில்"ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான நம் தமிழ்ப் பண்பாடுகளைக் காத்திடவேண்டும்.தஞ்சை பெரிய கோவில், கிருஷ்ணா புரம் கோவில் கலைச் சிற்பங்கள் எல்லாம் நம் மூதாதையர்களின் அரிய கலைகள் ... அவைகளை பாதுகாத்திட வேண்டியது இளந்தலைமுறையினரின் கடமை"எனப் பேசினார்.

தொடர்ந்து கடந்த ஜுன் மாதத்தில் நெல்லையில் நடந்த பாரதிப் படைப்புகளின் பன்முகப் பார்வை என்ற பன்னாட்டு கருத்தரங்கிற்கு கட்டுரைகள் எழுதிய கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் உட்பட பேராசிரியர்கள் மாணவ மாணவியருக்கு ஆய்வுக்கோவை மற்றும் சான்றிதழ்களை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் வழங்கினார்.
பரணி இலக்கிய முற்றம் கி.சந்திரபாபு பாரதி பாடல் பாடினார்.கவிஞர் சுப்பையா விழிப்புணர்வு பாடல் பாடினார்.நிறைவாக கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வெ.செல்லத்தாய் நன்றி கூறினார்.மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Sunday, July 7, 2019

தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜீ கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் அவர்கள் புதிய குளிர் சாதன பெட்டியை வழங்கினார்.

தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜீ கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் அவர்கள் புதிய குளிர் சாதன பெட்டியை வழங்கினார்.கருணைஇல்ல நிர்வாகி அல்லிராணி அனைவரையும் வரவேற்றார்.. விழாவில் வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம்  கல்வித்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) நாகராஜன் மாவட்ட நீதிமன்ற இலவச சட்ட ஆலோசனை மைய வழிகாட்டி ஆறுமுகம் (ஓய்வு) ஐஸ்வர்யா காமராஜ்.. பூசாரி ராதா. ஆன்மிக செயல்பாட்டாளர் அழககேந்திரன்.ராம்ஜீ, ட்ரஸ்ட் நிர்வாகி வெங்கிடபூபதி, ராஜேஸ் கண்ணன்,இராணுவ வீரர் முரளிதரன், திருச்சி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனார். பின்பு கருனை இல்லத்திற்கு பிரிட்ஜ் வழங்கிய எழுத்தாளர் மாரியப்பன் அவர்களை  அணை வரும்பாராட்டினார்கள்

Saturday, July 6, 2019

தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா



தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.,,,,     தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 100% தேர்ச்சி பெற்றஅரசு பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு   பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பணி நிறைவு கூடலிங்கம் தலைமை ஏற்ற இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சா கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி யாளராக பணியாற்றி பணி நிறைவு செய்த அ.மாரிமுத்து அவர்களுக்கு நினைவு பரிசினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். விழாவில் பாலக்கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் லெமாயு ,ஸ்ரீ ஜெயலட்சுமிரேடியோஸ் உரிமையாளர் சுரேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ,பெரியகுளம் மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .மேலும் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் வி மகாராஜன் வருஷநாடு வசந்தம் சொசைட்டி நிறுவினார் குணசேகரன், வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டி ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த விழாவில் சிலமரத்து பட்டி கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் கல்வி செம்மல் கலா பாண்டியன் மற்றும் தேனீ பட்டாம்பூச்சி குழுவினருக்கு கல்வி சுடர் விருது பெற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிணை போடி ஜ.கா மேல்நிலைப் பள்ளி நிறுவனர் முத்து விஜயன், கலவித் துறை கண்காணிப்பாளர் பணி நிறைவு நாகராஜன் சில மரத்து பட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மரிக்குண்டு பழனிச்சாமி ராஜேந்திரன் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் சீகபட்டி ஆசிரியர் வீரபாபு ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர் தேனி கலை இலக்கிய மைய நிறுவனர் பாண்டியராஜன் அவர்கள் நன்றியுரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் தொழிலதிபர்கள் மாணவர்கள் கிராமிய கலைஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Friday, July 5, 2019

பொட்டல் புதூரில் எஸ்.டி.பி.ஐ.கட்சி பொதுக்கூட்டம்...






எஸ்.டி.பி.ஐ.கட்சி 11வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளம் தொகுதி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது
முதலாவது பொட்டல் புதூர் மேலபேருந்து நிலையம் அருகில் கட்சியின் கொடியை மாநில பொதுச் செயலாளர் அச.உமர்பாருக் ஏற்றினார்
தொடர்ந்து பொட்டல் புதூர் தீப அலங்கார திடலில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்தி காஜா தலைமை தாங்கினார்
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்
எஸ்.எஸ்.அப்துல்கனி, மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், ஆலங்குளம் தொகுதி துணை தலைவர் செய்யது பாசில், தொகுதி பொருளாளர் துரைமுன்னா இபுராஹிம் , ஆகியோர்
முன்னிலை வகித்தனர்,
தொகுதி செயலாளர் அப்துல் அஜீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்
 மாநில பொதுச் செயலாளர் அ.ச.உமர்பாருக், மாநில செயலாளர் அகமது நவவி ,பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர், நேஷனல் விமன் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் பாத்திமா ஆலிமா,
அய்யா தர்மயுக வழிப்பேரவை
நிறுவன தலைவர் பாலமுருகன், சிறப்புரை ஆற்றினார்கள், பொதுக்கூட்டம் மேடையில்  பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன , மேடையில் கஜாபுயலில் மீட்பு பணியில் ஈடுபட்ட கட்சியின் செயல் வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் ,
பொதுகூட்டத்தில்
முதலியார் பட்டி நகர தலைவர் பாசுல் அஷ்ரப்,
பொட்டல் புதூர் நகர தலைவர் பி.எஸ்.பைசல்,
ரவணசமுத்திரம் நகர தலைவர் அஷ்ரப் அலி, முதலியார் பட்டி நகர செயலாளர் ஜாகிர் உசேன், பொட்டல் புதூர் நகர செயலாளர் உசேன், ரவணசமுத்திரம்
நகர செயலாளர் உசேன்
விமன் இந்தியா மாவட்ட செயலாளர் ரினோஷா
மற்றும் ஜமாத்தார்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
இறுதியாக பொட்டல் புதூர் நகர செயலாளர் முகம்மது அலாவுதீன் நன்றி உரை ஆற்றினார்

Tuesday, July 2, 2019

தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்




தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில்  உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்  தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் மரக்கன்று நட்டும் குத்து விளக்கு ஏற்றியும் விழிப்புணர்வு கூட்டத்தில் மது போதை மூலம் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு கூட்டத்தில் ஒரு மனிதன் மதுவிற்கு அடிமையானவர்களை மறுவாழ்வு பெற வைத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி
அமைப்பதற்கு சிறந்த மருத்துவர்கள்  உள்ளனர் என்றும்,
புகையிலை, சிகரெட், மதுபானங்கள் உள்பட பல போதை பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் கேன்சர், புற்றுநோய் போன்ற நோய்களால் நம் வாழ்க்கை விரைவில் நாமே அளித்துக் கொள்வதற்கு சமம் என்றும்,
போதை பழக்கத்திற்கு அடிமையான குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் போதை தடுப்பு மையத்தில் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து இதுவரையில் இந்த மருத்துவமனையில் 40 மேற்பட்டோர் பயன் பெற்று உள்ள காகவும்,
தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதில் தேனி மாவட்டம்  முதன்மை மாவட்டமாக  இருப்பதாகவும், போதை பழக்கத்திற்கு மாணவ, மாணவிகள் அடியாைைனவர்களை பெற்றோர்கள் கண்டித்து  வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக M.இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்,
பேராசிரியர் (N.R.T) ஆனந்த கிருஷ்ணன்,
இணை பேராசிரியர் ரமேஷ் பூபதி, பாண்டியராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை பற்றி இந்நிகழ்ச்சி வந்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் அறிவுரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அரசு தேனி மனநல ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்திற்குசிறப்பான முறையில் உதவிகள் செய்த கட்டட பொறியாளர் ஜெகன் அவர்களுக்கு கோடயம் வழங்கி சிறப்பு செய்தார் மேலும் இதுவரை இலவசமாக கட்டில், உணவு, மருத்துவமனையை சுத்தம் செய்த 5 நபர். ஓட்டல் உரிமையாளர் கள் , மனிதநேய காப்பகத்தினார் மற்றும் உதவிகள் செய்த நபர்களுக்கு மருத்துவ கல்லூரி  முதல்வர் ராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இந்த மருத்துவ விழிப்புணர்வு முகாமில் மருத்துவர்கள் செவிலியர்கள், மாணவர்கள்,, பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார்.                               

கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் முகாம்






திருத்தியமைக்கபட்ட  தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகின்சார்பில் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது
 
பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி வரவேற்று பேசினார்.

முகாமிற்கு கழுகுமலை நிலையமருத்துவ  அலுவலர் பாப்பு  தலைமை வகித்து பேசியதாவது
காசநோயாளிகள் அவர்களின் எடைக்கு தகுந்தவாறு மாத்திரை உட்கொள்ளும் முறைபற்றி எடுத்து கூறினார் , காசநோய் பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு காசநோய் கண்டறியும் அவசியம் பற்றி கூறினார்.
மருத்துவர் விஷ்ணுவர்தன் காசநோய் அறிகுறிகள் பற்றி பேசினார்.

இம் முகாமிற்கு கிராம சுகாதார செவிலியர்கள், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மற்றும் காசநோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இம் முகாமை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்